உதயநிதி வெளியிடும் அருள்நிதியின் DIARY படம்.. வெளியான செம ட்ரெய்லர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான “டி பிளாக், தேஜாவு” படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், தனது அடுத்த படத்தின் ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகி விட்டார் அருள்நிதி.
அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள “டைரி” படத்தை Five Star Creations LLP  சார்பில்  S கதிரேசன் தயாரிப்பில்  இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார்.  2.25 நிமிடங்கள்  ஓடும் இப்படத்தின் டிரெய்லர்  இப்படம் புதுவிதமான  திரைக்கதையில் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் திரில் பயணம் என்பதை உறுதி செய்துள்ளது.

Advertising
>
Advertising

இபடத்தின் டிரெய்லர் வெளியீடு இந்தியாவின் மிகப்பெரும் பிரபலங்களான கமல்ஹாசன், விக்ரம், அமீர் கான் உடன் மேலும் பலர்  கலந்து கொண்ட விழாவில் சமீபத்தில் நடந்தேறியது. “டைரி” டிரெய்லர் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதில் படக்குழு உற்சாகமாக உள்ளது.

2022-ஆம் ஆண்டு தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்த Red Giant Movies, உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிடுகிறார்.

இன்னாசி பாண்டியன் எழுதி இயக்கியிருக்கும் டைரி திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பவித்ரா மாரிமுத்து ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயபிரகாஷ், ஷிவா ஷஹ்ரா, சாம்ஸ், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

சேகர் பாபு இணை தயாரிப்பு செய்துள்ள இந்த படத்துக்கு ரான் ஈதன் யோஹான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக அரவிந்த் சிங் எடிட்டர்: S.P.ராஜா சேதுபதி பணிபுரிய,  கலை இயக்குனராக ராஜூ பணியாற்றியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகியாக மோகன் K பணிபுரிந்துள்ளார்.

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா - D'One

தொடர்புடைய இணைப்புகள்

Arulnithi Diary movie trailer udhayanithi release

People looking for online information on Arulnithi, Diary, Diary trailer, Udhayanithi will find this news story useful.