அருள்நிதி நடிக்கும் "தேஜாவு" படம்!.. படப்பிடிப்பு தொடர்பாக வெளியான 'தெறிக்கவிடும்' அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'.

arulnithi dejavu shoot wrapped up viral stills latest update

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.

arulnithi dejavu shoot wrapped up viral stills latest update

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான், அருள்நிதி சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்க்கு, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, அருள் E சித்தார்த் படத்தொகுப்பை கையாண்டு வருகிறார். பிரதீப் தினேஷ் சண்டை பயிற்சியாளராகவும், வினோத் ரவீந்திரன் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி விரைவில் வெளியீட்டிற்கு கொண்டு வர படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மற்ற செய்திகள்

Arulnithi dejavu shoot wrapped up viral stills latest update

People looking for online information on Arulnithi, Dejavu will find this news story useful.