அடுத்தடுத்து 3 படங்கள்… அருள்நிதியின் ‘D ப்ளாக்’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதி நடிக்கும் D ப்ளாக் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ‘RRR’ ஹிட்டுக்குப் பின் ஜூனியர் NTR-ன் அடுத்த படம்…. வெளியான மாஸ் update

டைரி ரிலீஸ்….

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவான வம்சம் மற்றும் மௌனகுரு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருகின்றன. அருள்நிதி நடிப்பில் டைரி படத்தின் முதல் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனத்தைப் பெற்றன.இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்நிதியின் தேஜாவு ரிலீஸ்…

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொது  ஜூன் மாதம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிள்ளது.

D ப்ளாக் ரிலீஸ்…

இந்நிலையில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான D ப்ளாக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படத்தை விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். திரில்லர் படமாக டி ப்ளாக் திரைப்படம் உருவாகி வருகிறது.

மூன்று மாதங்களில் மூன்று ரிலீஸ்…

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் அருள்நிதியின் மூன்று திரைப்படங்கள் ரிலீஸாக இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Arulnidhi D Block movie release date announced

People looking for online information on Arulnidhi, D Block movie, D Block movie release updates will find this news story useful.