BREAKING: அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை இயக்கப்போகும் ஜோதிகா பட இயக்குனர்! யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் அருள்நிதி.

arul nithi new movie update production house details

இவரின் வித்தியாசமான திரைக்கதை தேர்வுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக டிமாண்டி காலனி, கே 13, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற த்ரில்லர் படங்கள் அருள்நிதியை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.இந்த ஆண்டு வெளியான களத்தில் சந்திப்போம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் டைரி, தேஜாவு பட்ங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. 

arul nithi new movie update production house details

இதனைத் தொடர்ந்து அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை பிரபல விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் தயாரிக்கிறார். இது இவரின் முதல் தயாரிப்பாகும். ஜோதிகாவை வைத்து ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் Sy.கௌதம் ராஜ் இந்த படத்தை இயக்க இருக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் முதல் துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : Arulnithi

Arul nithi new movie update production house details

People looking for online information on Arulnithi will find this news story useful.