நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகிவரும் புதிய திரில்லர் திரைப்படத்தில் நடிகை வனிதா நடித்து வருகிறார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அப்போது பேசும்போது, “ஒட்டுமொத்தமாக இண்டஸ்ட்ரி ஒருவருக்கு அதிக சம்பளம் கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு சம்பள குறைப்பு செய்ய முயற்சிப்பது தவறான விஷயம். ஒரு படம் ஓடிவிட்டாலே சிலர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுகின்றனர். அவர்களது அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்றாகிவிடுகிறது.
முன்பு இருந்த காலத்தில் தயாரிப்பாளரின் வலிகளை புரிந்து கொண்டு படம் நஷ்டமானால், அவருக்கு அடுத்த படம் சம்பளம் வாங்காமல் பண்ணி தருவது என்பன போன்ற மரபுகள் இருந்தன. அந்த மாதிரி நெளிவு சுளிவுகளுடன் பணிபுரியும் கலைஞர்களால் இன்றும் சினிமா வாழ்கிறது.
இந்த படத்தைப் பொருத்தவரை சைக்கோ த்ரில்லர் திரைப்படம். எனக்கு நான் பணம் வேண்டும் என்று நினைத்த வித்தியாசமான கேரக்டர் இந்த படத்தில் அமைந்தது. நான் இந்த படத்தில் ஒரு சைக்கார்டிஸ்ட்டாக நடிக்கிறேன். இந்த படக்குழு மிகவும் அருமையானது.
என் வாழ்க்கையே திரில்லிங்காக அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒன்றுதான். இதேபோல்தான் எப்போதும் திரில்லர் படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு உண்டு. இந்த படம் அதையும் தாண்டி வித்தியாசமாக இருக்கும். இதே போல் ஒரு தயாரிப்பாளராக நானும் நல்ல படங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன்.
சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஒத்துழைத்து பணிபுரிய தயாராக இருக்கிறேன். என்னிடம் பேசுங்கள் என்று நான் கூறுகிறேன். ஆனால் பலரும் என்னிடம் பேசவே பயப்படுகின்றனர், கேட்டால் ஏன் என்று தெரியவில்லை என்று கூறுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வனிதா விஜயகுமார் பேசியிருக்கும் பல்வேறு விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.