ஜெண்டில்மேன் 2 படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலை இயக்குனர்…. வெளியான லேட்டஸ்ட் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கியுள்ளார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

Advertising
>
Advertising

Also Read | லாரன்ஸ் & சரத்குமார் நடிக்கும் ‘ருத்ரன்… பக்கா மாஸ் firstlook உடன் வெளியான ரிலீஸ் update

ஜெண்டில்மேன் 2

மெகா தயாரிப்பாளர்  ஜென்டில்மேன் கே. டி. குஞ்சுமோன்  தயாரிக்கும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2’. இப்படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அணிசேர உள்ளதாக  அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே , இயக்குனராக நானி நடித்த  'ஆஹா கல்யாணம்' புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா,  இசை அமைப்பாளர் 'பாகுபலி’, 'RRR' புகழ் மரகதமணி (எம்.எம்.கீரவாணி), ஒளிப்பதிவாளராக 'ரட்சகன்', 'ருத்ரமாதேவி', 'டேம் 999' புகழ் அஜயன் வின்சென்ட் ஆகியோர் பெயரை அறிவித்தார் கே.டி.குஞ்சுமோன்.

கலை இயக்குனர் ஒப்பந்தம்

தற்போது 'ஜென்டில்மேன்2' கலை இயக்குனராக (Art Director) தோட்டா தரணி பெயரை அறிவித்துள்ளார். இப்படத்தில் தோட்டா தரணியின் மகள் ரோகிணி தரணியும் இணைந்து பணியாற்றுகிறார் என்பது கூடுதல் செய்தி.  நாயகன், தளபதி, சிவாஜி, ருத்ரமாதேவி, குஞ்சுமோன் தயாரிப்பில் ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன்  போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் இவர். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில்  'பொன்னியின் செல்வன்' பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ யார்?

ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர் நேஷ்னல் சார்பில் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் பிரம்மாண்ட படமான 'ஜென்டில்மேன்2' வின் கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் இருவரும் அறிவிக்கப் பட்ட நிலையில்,  கதாநாயகன் யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள தயாரிப்பாளர்  “ அது குறித்த அறிவிப்பு விரைவில் தெரிய வரும்” என்று தெரிவித்தார்.

Also Read | நகைச்சுவை நடிகர் செந்தில் மகனை பாத்துருக்கீங்களா.. ? பாபி சிம்ஹா படத்துல அறிமுகமாகிறார்.!.

Art director Thottadharani signed in Gentleman 2

People looking for online information on Art director Thottadharani, கே டி குஞ்சுமோன், ஜெண்டில்மேன் 2, Gentleman 2, K T Kunjumon will find this news story useful.