பிரபல கலை இயக்குநரான பி.கிருஷ்ணமூர்த்தி காலமானதையடுத்து பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் கலை இயக்குநராக பணியாற்றியவர் பி.கிருஷ்ணமூர்த்தி. ஜி.வி.அய்யர், பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.
திரைப்படங்களில் இவரது கலைநயங்கள் பெரிதும் ரசித்து பாராட்டப்பட்டவை. மேலும் இவர் 5 முறை தேசிய விருதையும் வென்றுள்ளார். தமிழில் தாஜ்மஹால், பாரதி, அழகி, நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் கலை இயக்குநராக இருந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் மனைவியுடன் வசித்து வந்த இவருக்கு, நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு பிரலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.