நோ லாண்ட்’ஸ் மேன் (‘No Land’s Man’) என்ற ஆங்கிலப் படத்தை தயாரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, 99 சாங்ஸ், தலைவன் இருக்கின்றான், ஆடுஜீவிதம், அயலான் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்,.
‘No Land’s Man’படத்துக்கு இசை அமைப்பதுடன் இணைத் தயாரிப்பாளரும் ரஹ்மான் தான் என்று நவாஸுதின் சித்திக் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வங்காள இயக்குனர் முஸ்தொபா சர்வார் ஃபரூக்கி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவாஸுதின் சித்திக்குடன் தியேட்டர் ஆர்டிஸ்டான மேகன் மிட்ஷெல் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது,
இந்தப் படத்தின் கதை பெங்காலி நாயகன் (நவாஸ்), ஆஸ்த்ரேலிய பெண்ணை (மேகன்), அமெரிக்காவில் சந்தித்து காதல் வயப்படுகிறான், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன