ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர் கேட்ட கேள்வி..! - இசைப்புயல் சொன்ன சீக்ரட் என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக அறியப்படுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையமைத்த பல பாடல்கள், காலங்கள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிசியாக இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவர் தனது இசை ப்ரோக்ராம் செய்யும் சாஃப்ட்வேரின் புகைப்படத்தை பகிர்ந்து, ''இந்த புதிய வெர்ஷன் எப்படி இருக்கிறது'' என கேட்டிருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், ''இந்த புது வெர்ஷனின் க்ராக் ஃபைல் உங்களுக்கு எப்படி கிடைச்சது சார்'' என கேள்வி கேட்க, அதற்கு அவர், 'மூன்று மாதங்களுக்கு டெமோவாக பயன்படுத்த அவர்கள் அனுமதித்துள்ளதாக கூறி, சிரிக்கும் எமோஜியையும் பதிவிட்டிருக்கிறார். இசைப்புயலின் இந்த கூலான ரிப்ளையை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர் கேட்ட கேள்வி | A.R.Rahman give a super reply to a fan's question in instagram

People looking for online information on AR Rahman, Ponniyin Selvan will find this news story useful.