ARR - உதயநிதி - மாரி செல்வராஜ்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தெறி கூட்டணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் கூட்டணி:

Advertising
>
Advertising

கர்ணன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜை நேரில் சந்தித்துப் பாராட்டினார். அப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இது சம்மந்தமான தகவல்கள் பரவி ரசிகர்களுக்கு ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் தனனுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நாளை மிகப்பெரிய அறிவிப்பு’ என வைத்திருந்தார். இதனால் இன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்போ, போஸ்டரோ அல்லது வேறு ஏதேனும் அப்டேட்டோ வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.

"அடங்காத” ஜர்னலிஸ்ட்டாக தனுஷ்… அரசியல்வாதி சமுத்திரக்கனி – மாறன் டிரைலர் சொல்லும் கதை!

வெளியான மாமன்னன் அப்டேட்:

இன்று காலை 10 மணிக்கு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் டைட்டில் மாமன்னன் என அறிவிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது .

வடிவேலுவின் ரி எண்ட்ரி

நடிகர் வடிவேலு, சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் தயாராகி வரும் நிலையில், அதன் பிறகு வடிவேலு ஒப்புக்கொண்ட இரண்டாவது படமாக மாரி செல்வராஜின் மாமன்னன் படம் அமைந்துள்ளது.  இப்படி சில ஆண்டுகளாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த ‘மாமன்னன்’ பட அறிவிப்பு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

பஹத் பாசில்:

ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என எந்த பாத்திரத்திலும் தனது வித்தியாசமான நடிப்பின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பஹத் பாசில். மலையாள சினிமாவை தாண்டியும் கேரளாவுக்கு இணையாக தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. ஏற்கனவே தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் பஹத் பாசில் தோன்றியிருக்கிறார். அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் பஹத் பாசில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘விக்ரம்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாமன்னன் படத்தில் பஹத் பாசில் இணைந்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான்:

இதுபோலவே இந்த படத்துக்கு இசையமைப்பதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளது. முதல் முறையாக மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணையும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனால் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வடிவேலு .. ஃபகத் பாசில்.. செம.. மாரி - உதயநிதி படத்தின் வேற லெவல் டைட்டில்

தொடர்புடைய இணைப்புகள்

ARR Vadivelu Mari Selvaraj Udhayanithi Maamannan

People looking for online information on AR Rahman, உதயநிதி ஸ்டாலின், மாமன்னன், மாரி செல்வராஜ், வடிவேலு, Maamannan Movie, Mari Selvaraj, Udhayanithi Stalin, Vadivelu will find this news story useful.