அதிர்ச்சி!… ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்… A.R.ரஹ்மான் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரீஸ் நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான வாங்கலீஸ் இயற்கை எய்தியுள்ளது உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

இசையமைப்பாளர் வாங்கலீஸ்

அகாடமி விருது பெற்ற மறக்க பிரபல இசையமைப்பாளரான வாங்கலிஸ், மரண செய்தி இசை ரசிகர்களுக்கும் உலக சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ’சேரட் ஆஃப் ஃபயர் ம்யூசிக்’ படத்திற்காக இவர் ஆஸ்கர் விருதை வென்றவர். மேலும் பல மறக்க முடியாத, திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ள இவர் , தன்னுடைய 79 வயதில் காலமானார்.

அதிர்ச்சி மரணம்…

இது சம்மந்தமாக கிரீஸ் நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் அஞ்சலியை தெரிவித்துள்ளனர். இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவமனையில் இறந்துள்ளார். எலக்ட்ரானிக் இசையை அதிகமாக தனது படைப்புகளில் பயன்படுத்திய இவரை எலக்ட்ரானிக் இசையின் பிதாமகன் என இசை ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

இசைப்புயல் இரங்கல்

இந்நிலையில்  வாங்கலிஸின் மரணம் பற்றி இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ள இரங்கலில் “நம்முடைய இசை குரு இப்போது இல்லை. Rest in peace வாங்கலீஸ்” எனக் கூறி அவரோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தின் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

ARR homage to Oscar winning Music composer Vangelis Death

People looking for online information on Oscar award winner, Vangelis will find this news story useful.