"ARRக்கு ஹிந்தியில பேசுனா புடிக்காது!"- ரஹ்மானின் வேறலெவல் பதில்!.. சிவாங்கி FUN LOVE ப்ரொபோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டிருக்கிறார்.

ARR dont like hindi says sivaangi rahman epic reply

அண்மையில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்த 99 சாங்ஸ் மியூசிக்கல் திரைப்பட அறிமுக விழா நடந்தது. இதனையொட்டி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 99 சாங்ஸ் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஹீரோ இஹான் பாத் உள்ளிட்டோருடன் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.

ARR dont like hindi says sivaangi rahman epic reply

இதில் ஹீரோவிடம் அலைபாயுதே ஸ்டைலில், “நான் உன்னை பார்க்கல.. உன் கண்கள் அழகா இருப்பதா நினைக்கல.. இதெல்லாம் நடந்துடுமோ என பயமாக இருக்கு” என அலைபாயுதே ஸ்டைலில் சிவாங்கி ப்ரொபோஸ் செய்தார். இந்த அலப்பறைகளுக்கு முன்னதாக பலரும் பல மலையாள, தெலுங்கு என இஹானுக்கு கற்றுக்கொடுத்தனர்.

அப்போது சிவாங்கியை இஹானிடம் இந்தியில் பேச சொல்லி தொகுப்பாளர் மா.கா.பா பேசினார். அப்போது சிவாங்கியோ,  “அவருக்கு தான் ஹிந்தியில பேசினா பிடிக்காதே” என்று ரஹ்மானை குறிப்பிட்டு காண்பித்து சொன்னார். இதற்கு அரங்கத்துடன் சேர்ந்து பதிலுக்கு தானும் சிரித்த ரஹ்மான்,  “தமிழ் ஷோவில் தமிழ் பேசுங்கள் ... ஹிந்தி ஷோவில் இந்தி பேசுங்கள்” எனக் குறிப்பிட்டார்.

இஹான் பாத் மற்றும் எடில்ஸி வர்காஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 99 சாங்ஸ் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் இசையமைத்துள்ளதுடன், இந்த படத்தை ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ளார். பல மொழிகளில் வெளியாகும் இந்த படம் வரும் ஏப்ரல் 16-ஆம் தமிழிலும் வெளியாகிறது.

ALSO READ: 'காமெடி!'.. 'கேரக்டர்!'.. 'ஹீரோ!'.. சுல்தான்!.. கர்ணன்!.. மண்டேலா!.. கலக்கும் யோகி பாபு .. ரசிகர்கள் புகழாரம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ARR dont like hindi says sivaangi rahman epic reply

People looking for online information on 99 songs, AR Rahman, Sivaangi, SuperSinger, VijayTelevision will find this news story useful.