ஷாருக் கானுடன் ‘இசைப்புயல்’ AR ரஹ்மான்… ARR அமீன் பகிர்ந்த வைரல் PHOTO… குவியும் லைக்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் AR ரஹ்மானின் மகன் ARR அமீன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “லோகேஷ்க்கு கார்…. சூர்யாவுக்கு ரோலக்ஸ்… உங்களுக்கு என்ன Gift..?” அனிருத் சொன்ன செம்ம பதில்

நயன்தாரா திருமணம்…

ஜூன் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வெகுசில திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பாலிவுட் முன்னணி நடிகர் ஷாரு கான் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

வைரல் புகைப்படம்…

இதையடுத்து அவர் இயக்குனர் அட்லியோடு, ஷாலியின் தங்கை ஷாமிலி ஆகியோரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்த திருமணத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தனது குடும்பத்தினரோடு கலந்துகொண்ட நிலையில் ஷாருக் கானோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தை ரஹ்மானின் மகன் ARR அமீன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குஷியான ரசிகர்கள்…

இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ரஹ்மான் மற்றும் ஷாருக் கான் இணைந்த படங்களைப் பற்றியும் அவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் பற்றியும் மகிழ்ச்சியோடு கமெண்ட் செய்து வருகின்றனர். ரஹமான் ஷாருக் கான் கூட்டணியில் உருவான தில் சே மற்றும் ஸ்வதேஷ் உள்ளிட்ட படங்கள் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்ட படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “சார் ஒரு Photo…”… Geniune ஆக மறுத்த அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ARR Ameen shared a viral pic AR Rahman and shah rukh khan

People looking for online information on AR Ameen, AR Rahman, ARR Ameen, Shah Rukh Khan will find this news story useful.