“போறதுனா போங்க சரண்!.. ஒருத்தர நம்பி SURVIVOR SHOW இல்ல.. பூச்சாண்டி காட்டதீங்க!”.. அர்ஜூன் காட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பிக்பாஸ் என்றால் ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ரியாலிட்டி ஷோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இன்னொரு பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது.

arjun reaction for saran walk out thought zeetamil survivor

முன்னணியில் இருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவை நடிகர் மற்றும் இயக்குநர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார். ஆரம்பத்திலிருந்தே அர்ஜூன் மிகவும் ஸ்ட்ரிக்டாக இந்த கேம் ஷோவை வழிநடத்தி வருகிறார். பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருக்கும் இந்த கேம் ஷோ மிகவும் கடினமான டாஸ்குகளுடன் சென்று கொண்டிருக்கிறது.

arjun reaction for saran walk out thought zeetamil survivor

காடர்கள் மற்றும் வேடர்கள் என்று இரண்டு அணிகளாக இந்த போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு இந்த கேம் ஷோ நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த ஷோவில் இருந்து சிருஷ்டி டாங்கே மற்றும் இந்திரஜா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

arjun reaction for saran walk out thought zeetamil survivor

இரண்டாவது வாரத்தில் இருந்து இந்த எலிமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் தற்போது எலிமினேஷன் பற்றி அர்ஜூன் பேசிக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் தான் கடந்து வந்த பாதை, தன்னுடைய தோல்விப் படங்கள், அதனால் ஏற்பட்ட பண இழப்புகள், பின்னர் அவற்றை ஈடு கட்டுவதற்கு தன்னுடைய தாயார் தனக்கு உதவி செய்தது என அனைத்தையும் கூறி இருந்தார்.

அர்ஜூனின் கதை போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்த நிலையில் போட்டியாளர்கள் மேலும் கடுமையான டாஸ்குகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மீதமிருக்கும் போட்டியாளர்களுடன் அர்ஜூன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஐஸ்வர்யாவிடம், பிரபல நடிகர் சரண், தான் வாக் அவுட் செய்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை கவனித்துவிட்ட அர்ஜூன் என்னவென்று வினவ, அப்போது ஐஸ்வர்யா, சரண் வாக் அவுட் செய்வது பற்றி பேசுவதாகவும், அதனால் அந்த முடிவை எடுக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தியதாகவும் ஐஸ்வர்யா, அர்ஜூனிடம் தெரிவித்தார்.

இதனால் சற்றே கோபம் அடைந்த அர்ஜூன், சரணை பார்த்து, “நீங்கள் வெளியேற வேண்டும் என்றால் தாராளமாக வெளியேறலாம். உங்கள் ஒருத்தரை நம்பி இந்த ஷோ நடத்தப்படவில்லை. எனவே வாக் அவுட் அது இது என பூச்சாண்டி காட்ட வேணாம்!” என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

நடிகர் சரண், தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் படம் முழுவதும் வரக்கூடிய முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி பிரபலமானார். தற்போது ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arjun reaction for saran walk out thought zeetamil survivor

People looking for online information on Action king arju, Argument, Arjun, Arjun Sarja, Charan, Heat, Hot, Reality show, Saran, Sensational, Survivor, Trending, TV show, Viral, ZeeTamil will find this news story useful.