மலைகா அரோரா கர்ப்பமா..? "கர்மா திருப்பி அடிக்கும்".. வதந்திகளை சாடிய அர்ஜூன் கபூர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோரா, பிரபல நடிகர் சல்மான் கானின் சகோதரரைத் கல்யாணம் செய்து கொண்டார். பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரை இருவருமே கவனித்துக் கொள்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல தமிழ் சீரியலில் 90S ஹீரோயின் கௌசல்யா..! மாஸ் எண்ட்ரி .. வைரலாகும் ப்ரோமோ..

இதனிடையே நடிகர் அர்ஜூன் கபூரை தற்போது மலைகா அரோரா காதலித்து வருகிறார். வயது வித்யாசம் இவர்களுக்கு இடையில்  இருந்தாலும் இருவருமே காதலை வெளியில் சொல்லவே செய்கின்றனர். நிகழ்ச்சிகளிலும் சேர்ந்து தோன்றும் இவர்களுக்கு இடையில் தற்போது திருமண எண்ணம் இல்லை என்று காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அர்ஜூன் கபூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் மலைகா அரோரா தற்போது கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் சினிமா செய்தி வட்டாரங்கள் வெளியிட்டு வந்த செய்திகளுக்கு எதிராக நடிகர் அர்ஜூன் கபூர் தமது சோசியல் மீடியாவில் கடுமையாக சாடியும் விமர்சித்தும் பதிவிட்டுள்ளார். இதுபோன்று தரம் தாழ்ந்து குப்பை வதந்திகளை நேர்மையற்ற முறையில் சர்வசாதாரணமாக பரப்பி வரும் எவரும் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியவர், “கர்மா எல்லாரையுமே பின் தொடரும்.. நீங்கள் யாரா இருந்தாலும் சரி எனக்கு பிரச்சனை இல்லை..இந்த மாதிரி செயல்களின் விளைவுகளில் இருந்து நீங்க தப்பிக்க முடியாது. எதை நாம தர்றோமோ அதுதான் நமக்குத் திரும்ப கிடைக்கும். கொஞ்சம் லேட் ஆனாலோ அல்லது சீக்கிரமோ நீங்கள் செய்த இந்த மாதிரியான வேலைக்கான பலனை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு திருப்பித் தரும்” என்று விமர்சித்துள்ளார். இதேபோல், மலைகா அரோராவும் இந்த செய்திகளை மறுத்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Also Read | அசீம் அடிக்க வந்தாரா? கன்னத்த திருப்புனாரா?.. ரவுண்டு கட்டும் ஹவுஸ்மேட்ஸ்.. அடுத்த குறும்படமா?

தொடர்புடைய இணைப்புகள்

Arjun kapoor slams malaika arora pregnancy and wedding rumours

People looking for online information on Arjun Kapoor, Arjun kapoor malaika arora wedding, Karma, Malaika aroramalaika arora pregnancy will find this news story useful.