அர்ஜூனின் முதல் மகள் ஹீரோயின்.. ‘வேற லெவல்’ யோசனையுடன் களமிறங்கிய 2-வது பொண்ணு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதபாத்திரத்திரங்களிலும் நடித்து வந்தவர் நடிகர் அர்ஜுன்.

Arjun daughter Anjana makes environment friendly bag
Advertising
>
Advertising

Also Read | “மனுஷ்யரெல்லாம் ஒன்னு போலே” - கீர்த்தி சுரேஷ் அழகாய் பாடுன ஓணம் Song .. ஹார்ட்டின் விடும் fans.!

பல திரைப்படங்களை இயக்கியும் நடித்திருக்கும், நடிகர் அர்ஜூன், பொதுவாகவே ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களை வசீகரிப்பதில் பெயர் போனவர். இதனாலேயே நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய இரண்டாவது மகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

Arjun daughter Anjana makes environment friendly bag

அதன்படி நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜூன் உண்ணும் பழங்களின் தோல்களை  கொண்டு ஹேன்ட்   பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். உலகத்திலேயே இப்படி செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில், இத்தகைய பெருமைக்குரிய சிறப்பால் அஞ்சனா அர்ஜூன் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். ஆம், அப்படி உருவாக்கிய அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தையும் அஞ்சனா அர்ஜூன் துவங்கி உள்ளார்.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை  ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா மற்றும் இதனை புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி  விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்ததுடன், ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சனாவை வாழ்த்தினார்.

Also Read | Video: சாண்டி மாஸ்டருடன் ‘தேனுஸ் குத்தாட்டம்’.. ஆடியன்ஸ்க்கும் ஒரு டாஸ்க் கொடுத்த அதிதி.!

தொடர்புடைய இணைப்புகள்

Arjun daughter Anjana makes environment friendly bag

People looking for online information on Anjana, Anjana arjun, Anjana sarja, Arjun Sarja, Tamilisai Soundarrajan will find this news story useful.