"விஜியும்தான்..".. மாட்டிவிட்ட சரண்.. திரும்பவும் TENSION ஆன அர்ஜூன்.. "SCHOOL பையன் மாதிரி".. செம அட்வைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சர்வைவர் நிகழ்ச்சியில் அர்ஜூன் - சரண் பேச்சுகள் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகின்றன. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ சர்வைவர்.  திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர்களை போட்டியாளர்களாக வைத்து, தொடங்கப்பட்டு, ஒளிபரப்பாகி வரும் இந்த ரியாலிட்டி ஷோ, ரியாலிட்டி கொஞ்சம் சினிமாத்தனம் கொஞ்சம் என பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த ஷோவில் கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் கடினமாக இருப்பதால் இந்த ஷோ இன்னும் வலிமையாக ரசிகர்களிடத்தில் ஒரு சீரியசான ஷோவாகி இருக்கிறது. குறிப்பாக இந்த ஷோவை வழிநடத்தக்கூடிய பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மிகவும் ஸ்ட்ரிக்டாக இருப்பதால், ஷோ இன்னும் சூடாக இருக்கிறது.

முன்னதாக இந்த ஷோவில் பங்கு கொண்ட போட்டியாளர்கள் காரர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் முன்னதாக பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே மற்றும் நடிகை இந்திரஜா இருவரும் வெளியேற்றப்பட்டனர். சில திரைப்படங்களில் சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இதேபோல் இந்திரஜா, ‘பிகில்’ திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர்களின் எலிமினேஷன்க்கு பிறகு ஷோ, இன்னும் சீரியஸாகி உள்ளது. அந்த வகையில் நடிகர் அர்ஜூன் ஏற்கனவே ஒரு முறை பேசும் பொழுது, தான் கடந்து வந்த பாதையை பற்றியும் தன்னுடைய தோல்வி படங்கள், தான் இழந்த பணம் உள்ளிட்டவை பற்றியும் பேசினார். மேலும் தன்னுடைய தாயார் தனக்கு செய்த உதவிகள் குறித்தும் அர்ஜுன் பேசி இருந்தார்.

அவருடைய கதையை மோட்டிவேஷனாக எடுத்துக் கொண்டு இந்த ஷோவில் பலரும் பர்ஃபார்மென்ஸ் செய்து வருகின்றனர். இதனிடையே இளம் நடிகர்களில் ஒருவரான சரணும் இந்த ஷோவில் இணைந்திருக்கிறார். நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் படம் நெடுக வலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சரண் நடித்திருந்தார். முன்னதாக இவருக்கும் அர்ஜூனுக்கும் நடந்த பேச்சுவார்த்தை ப்ரோமோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் வாக் அவுட் செய்வதாக சரண் கூறி இருந்ததை ஐஸ்வர்யா, அர்ஜூனிடம் தெரிவித்ததை அடுத்து, அர்ஜூன் கோபப்பட்டு சரணிடம், “உங்களை நம்பி ஷோ இல்லை..” வெளியேற வேண்டும் என்றால் போகலாம் பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு முன்பாக சரண், தன்னுடைய தோழியுடன் செல்போனில் பேசியதால் மாட்டிக்கொண்டார். அப்போது அர்ஜூன் அவரை கண்டித்தார். தொடர்ந்து போட்டியாளர்கள் பலரும் சரண் மீது கடுப்பாகி விட்டனர். அவரோ, தன்னை மட்டும் ஏன் திட்டுகிறார்கள் என்பதுபோல் பேசியிருக்கிறார். இதனை அடுத்து அனைவரும் சரணை வெளியேற்றுவதற்கு நாமினேட் செய்தனர். ஆனால் விஜி நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். காரணம் சரணுக்கு தங்கமுத்து கிடைத்துவிட்டது. அதனால் அவர் உள்ளேயே இருந்தார்.

மேலும் ஷோவில் நியாயமாக இருக்க வேண்டும் என்று அர்ஜூன் கூறியதற்கு, பதில் கூறிய சரண்,  “நியாயம் என்றால் எல்லாரும் நியாயமாக இருக்க வேண்டும். நான் மட்டும் நியாயமாக இருப்பதா?” என்று கேட்டதுடன், அன்றைக்கு போன் பேசியது, தான் மட்டுமல்ல விஜியும் தான் என்று விஜியையும் சேர்த்து மாட்டி விட்டார். இதை பார்த்த பலரும் ஸ்கூல் பையன் போல் எல்லாரையும் மாட்டி விடுகிறார் என்று கடுப்பாகி விட்டனர். இதனைத்தொடர்ந்து விக்ராந்த் கடுப்பாகிவிட்டார். சரண், கேமரா இருந்தால் ஒரு மாதிரியும், கேமரா இல்லை என்றால் ஒரு மாதிரியும் நடந்து கொள்வதாக விக்ராந்த் குற்றம்சாட்டினார்.

மேலும் விஜயலட்சுமியும் போன் பேசியதாக போட்டுக்கொடுத்த சரணை பார்த்து அர்ஜூன் டென்ஷனாகி, “ஸ்டாண்ட் அப் சரண்.. எழுந்து வாங்க இங்க” என்று அழைத்து, “என்ன ஸ்கூல் பசங்க மாதிரி அனைவரையும் தவறு செய்தார்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்? நீங்கள் முதலில் நேர்மையாக இருங்கள். உங்களை ஒரு தவறு சொன்னால் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அவர்களும் இப்படி தானே செய்கிறார்கள் என்று மற்றவர்களை சொல்லாதீர்கள். அதை பார்ப்பதற்கு கேமரா இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம். அந்த தவறை நாங்கள் கவனித்து கேட்டுக்கொள்கிறோம். உங்கள் மீது ஒரு தவறு சொன்னால் அதை மட்டும் சரி செய்யுங்கள்.” என்று கடுப்பாக அட்வைஸ் பண்ணி அனுப்பி விட்டார். மேலும் தவறு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை என்று நேரடியாகவே அர்ஜூன் கூறிவிட்டார்.

இதைப் பார்த்த பலரும், “என்னதான் நியாயம் இருந்தாலும் அர்ஜூனிடம் இப்படி வாக்குவாதம் செய்து இருக்கத் தேவையில்லை!” என்று சரணை பற்றி குறிப்பிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Arjun advise saran school boy behaviour survivor zeetamil

People looking for online information on Arjun, Saran, Survivor, ZeeTamil, ZeeTV will find this news story useful.