“நீ சிம்புவா? இல்ல கலா மாஸ்டரா?”.. ஐடியா கொடுத்த அபிஷேக்கை கடுப்பாகி வெளுக்கும் பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவரும் எப்போதும் ஒரே அணியாக இருப்பது பற்றி பலரும் பேசி வருவது உண்டு.

are you simbu priyanka shout at abishek for motivating raju

இவர்கள் இருவரையும் பொருத்தவரை எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது, பாசிட்டிவாக உரையாடுவது என்று இருப்பதை பார்க்க முடிகிறது. இதனிடையே பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலருடன் உட்கார்ந்து கலகலவென மிமிக்ரி, பேச்சு என பேசி ஜாலியாக பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார் ராஜூ.

ஆடியன்ஸையும் கட்டிப்போடும் அவருடைய பெர்ஃபார்மன்ஸ் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இதை இங்கிருந்து பார்த்துவிட்டு பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவரும் பொருமல் ஆகினர்.

are you simbu priyanka shout at abishek for motivating raju

அப்போது அபிஷேக் நான்தான் ராஜூவை இப்படி மோட்டிவேட் செய்ததாகக் கூற, அனைவரும் அதிர்ந்தனர். அதாவது அபிஷேக்,  ராஜூவிடம் தான் கூறிய அட்வைஸ் குறித்து பிரியங்கா மற்றும் நிரூப் மத்தியில் ரிவீல் செய்தார்.

அதன்படி, “முன்பெல்லாம் உன் ஹியூமர் கொஞ்சம் இன்னோவேடிவாக இருந்ததுடா.. இப்போ நீ பேசினாலே பெரிய விஷயமாக இருக்கிறது. இருப்பினும் அடுத்த லெவலுக்கு போகனும் என்பது என் ஆசை என சேலஞ்ச் செய்தேன். அவன் வந்துடுறேன்.. வந்துடுறேன் என சொன்னான்” என்று ராஜூவிடம் சொன்னதாக அபிஷேக் கூறிக்கொண்டிருந்தார்.

உடனே கடுப்பாகி பிரியங்கா, “உனக்கு எதுக்கு இந்த வேலை? நீ என்ன சிம்புவா? எனக்கு நடிக்கத் தெரியதுங்குற மாதிரி.. நீ சிம்புவா? இல்லை சும்மா கிழி கிழினு கிழிச்சுட்டீங்க என்று ஜட்ஜ்மெண்ட் கொடுப்பதற்கு நீ என்ன கலா மாஸ்டரா?” என்று ஐடியா கொடுத்த அபிஷேக்கை கடுப்பாகி வெளித்துக் கொண்டிருந்தார்.

இதேபோல் நிரூப்பும் ‘அப்படி பண்ணாதடா டேய்’ என கூறினார். ‘கலா மாஸ்டரா’ என பிரியங்கா கேட்டதற்கு., ‘இல்லை பரோட்டா மாஸ்டர்’ என அபிஷேக் கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Are you simbu priyanka shout at abishek for motivating raju

People looking for online information on Abhishek, AbishekRaaja, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Kalaa Master, Priyanka, Raju Bhai, Raju BiggBoss, RajuJeyamohan, Silambarasan TR, Simbu, VJ Priyanka will find this news story useful.