"பாவனிய லவ் பண்றியா?" .. கல்யாணம் ஆன அபினயை பார்த்து ராஜூ கேள்வி! அதிர்ச்சியில் உறைந்த BIGGBOSS வீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ட்ரூத் அல்லது டெத் கேம் நடைபெற்றது. அதன்படி ஒரு பாட்டிலை உருட்டி, அந்த பாட்டிலின் முனை யாரை காட்டுகிறதோ, அவர்கள் ட்ரூத் அல்லது டெத் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து விளையாட வேண்டும். 

are you loving pavani biggbosstamil5 raju to abhinay
Advertising
>
Advertising

இந்த விளையாட்டில், ராஜூ உருட்டினார். பாட்டிலைத்தான். உருட்டிவிட்டவர், அந்த பாட்டிலின் முனை அபினயை காட்ட, ராஜூ கேட்ட கேள்விதான் கொல மாஸ். கொஞ்சம் வெடிகுண்டு கேள்விதான் என்று சொல்லலாம். ஆம், ராஜூ, அபினயிடம், “பாவனியை லவ் பண்றியா?” என பொசுக்கென கேட்டுவிடுகிறார்.

இது அநேகமாக அனைவருக்கும் அதிர்வலைகளை உண்டுபண்ணியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே அதிர்ச்சியை அபினயின் முகத்திலும் காண முடிய்கிறது.

are you loving pavani biggbosstamil5 raju to abhinay

ஏற்கனவே திருமணம் ஆன அபினயை பார்த்து ராஜூ, இவ்வாறு கேட்டதும், அபினய் முகத்தில் கலவரம் தொற்றிக்கொள்ள, உடனே ராஜூவை பார்த்து, மிரட்சியாக, “என்னடா கேக்குற?” என்று கேட்கிறார். ராஜூவின் ரியாக்‌ஷனும் புரிந்துகொள்ள முடியவில்லை. 

புரோமோவில் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் எபிசோடில் எப்படியாக வந்திருக்கிறது என்பது தெரியவில்லை என்றாலும், நிச்சயம் ராஜூவின் இந்த கேள்விக்கு பாவனியின் ரியாக்‌ஷன் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் முன்பொருமுறை அபினயை தனியே அழைத்து பேசிய பாவனி, “நீங்கள் என்னிடம் நடந்துகொள்வதை பார்த்தால் எனக்கு இப்படி கேட்டுவிட தோன்றுகிறது, உங்களுக்கு என் மீது என்ன ஃபீலிங்?” என நேரடியாக கேட்டார். 

ஆனால் அபினய் அப்போதே தெளிவாக, அது பாவனியின் கதையினால் அவர் மீதான பரிவுதான் என்பதை சொல்லிவிட்டார்.

பாவனி கணவரை இழந்து தனிப்பெண்ணாக வாழ்ந்து வரும் பிரபல சீரியல் நடிகை. விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Are you loving pavani biggbosstamil5 raju to abhinay

People looking for online information on Abhinay, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Pavani, Pavani Reddy, Raju, Raju jeyamohan, Vijay Television, Vijay tv will find this news story useful.