பிக்பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக ஹவுஸ்மேட்ஸ் பிரிந்து, சக போட்டியாளர்களின் உண்மை முகத்தை மக்கள் முன் வெளிக்கொண்டு வரும் உத்தியாக டிவி டிபேட் டாஸ்க்கில் ஈடுபட்டனர்.
ரெட் டிவி மற்றும் ப்ளூ டிவி என 2 அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த டாஸ்குகள் நடத்தப்பட்டன. இதில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் சிபி மூவரும், நிரூப் மற்றும் இமான் விஷயத்தை வைத்து டிபேட் செய்தனர். இதில் இமான் நடக்காததை நடந்ததாக சித்தரிப்பதாக சொல்லி விவாதத்தில் இருந்து வெளியேறினார்.
இதேபோல், தாமரை மற்றும் வருணைக் கொண்டு நடத்தப்பட்ட டிபேட்டில் தாமரைக்கு சிபி சலுகைகள் வழங்க, இதனைத் தொடர்ந்து எடுத்து தாமரை சிபியை கொஞ்சுவது பிரியங்கா கிண்டல் அடிக்கும் தொனியில் பேசியதாக தாமரை சண்டை போட தொடங்கினார். பின்னர் அது பிராங்க் என அபிஷேக், சிபி, பிரியங்கா மூவரும் கூறினர். எனினும் தாமரை சமாதானம் ஆகவில்லை.
இந்நிலையில் தன் விருப்பம் இல்லாமல் தன்னை வைத்து டிவி டிபேட் ஷோவில் கலாய்த்ததாக பிரியங்காவை குற்றம் சாட்டிய நிரூப், ஆவேசமாக கத்தினார். ஆனால் பிரியங்காவோ, நிரூப்பின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இதை செய்ய மாட்டோம் என முன்பாக பேசிய காட்சிகளை இப்போது குறும்படமாக வெளியிட வேண்டும் என பிக்பாஸிடம் கைகூப்பி கோரிக்கை வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரியங்கா மற்றும் நிரூப் இருவரிடையே வார்த்தை போர் அதிகரித்தது, அதன் தொடர்ச்சியாக நிரூப், “நீங்களே எல்லாத்தையும் பண்ணிடுவீங்க.. கிழிச்சிடுவீங்க..” என்று பேசியதும், “அப்போ உன் வாய்ல என்ன ஃபீடிங் பாட்டில் வெச்சிருந்தாங்களா? வாயை திறந்து சொல்ல வேண்டியதுதானே?” என்று பிரியங்கா நிரூப்பிடம் கேட்டார்.
பின்னர், அன்று தான் பேசியது தொடர்பான குறும்படத்தை பிக்பாஸிடம் கேட்டிருப்பதாகவும், அதற்காக தான் காத்திருப்பதாகவும் பேசிய பிரியங்கா, “வெளிய போனு சொன்னா நான் கெளம்பி போய்டுவேண்டா!” என்று நிரூப்பிடம் கூறினார்.