நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அர்ச்சனா வெளியேறிய காட்சிகள் மற்றும் கமலுடனான அவரது உரையாடல் ஆகியவை ஒளிபரப்பாகின. வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனா 75 நாட்கள் முடிந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அர்ச்சனா மிகவும் வலிமையான போட்டியாளர் என அனிதா, பாலாஜி ஆகியோர் வெளிப்படையாக நேற்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
பிக்பாஸ் ஆல் தி பெஸ்ட் சொல்லியதுடன் விர்ச்சுவல் ஹார்ட் ஒன்றையும் அளித்து அவரை வழியனுப்பி வைத்தார். இந்த நிலையில் அர்ச்சனாவின் குடும்பத்தினர் அவருக்கு அளித்த உற்சாக வரவேற்பு தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அதில் வீடு முழுவதும் வண்ண பலூன்கள் கட்டி, வீட்டை அலங்கரித்து உள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக மாலை அணிவித்து அவரை வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அவருக்கு ஆர்த்தி எடுத்து, கேக் வெட்டி அவரின் வரவை கொண்டாடி உள்ளனர். இதில் அர்ச்சனாவின் கணவர், அவரது மகள் சாரா, தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் இருக்கின்றனர். இதில் ஒரு சிறிய பகுதியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அர்ச்சனா பகிர்ந்து இருக்கிறார். முழு வீடியோவையும் அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.