அவரு ரொம்ப 'சந்தோஷமா' இருப்பாரு... அனிதாவை 'பங்கமாக' கலாய்த்த அர்ச்சனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோழி-நரி டாஸ்க் வழியாக அர்ச்சனா, ரியோ மற்றும் சோம் உள்ளிட்டோருடன் அனிதா மீண்டும் இணக்கமாகி இருக்கிறார். இடையில் இருந்த கருத்து வேறுபாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து விட்டது போல. இது நேற்று நடந்த நிகழ்ச்சி வழியாக இன்னும் உறுதியாகி இருக்கிறது. கிச்சனில் ரியோ, அர்ச்சனா, சோம் ஆகியோர் சமையல் செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது அனிதா நான் உதவி செய்கிறேன் என அர்ச்சனாவிடம் கேட்டார். வேண்டாம் என அர்ச்சனா சொல்லியும் அனிதா கேட்கவில்லை. இதைப்பார்த்த அர்ச்சனா, '' பிரபா நீ உண்மையிலேயே ரொம்ப நல்ல மனுஷன். இந்த 90 நாள் நீ சந்தோஷமா, நிம்மதியா இருந்துருப்ப. நாங்க தான் ரொம்ப பாவம்,'' என பங்கமாக கலாய்த்தார். பக்கத்தில் நின்று கொண்டு அனிதா இதற்கு சிரித்துக்கொண்டே இருந்தார்.

தொடர்ந்து அனிதாவை தூக்கிக்கொண்டு சென்ற அர்ச்சனா அவரை பெட்ரூமில் கொண்டு படுக்க வைத்து அவருக்கு போர்த்தி விட்டு, தாலாட்டு எல்லாம் பாடினார். இருவருமே இதை ஸ்போர்ட்டிவாக எடுத்திக்கொண்டதால் ரசிக்கும்படி இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஆஜீத், ஷிவானிய விட அர்ச்சனா எவ்வளவோ பரவால்ல என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Archana trolled Anitha Sampath in BB House, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.