சனம், அனிதா, நிஷா ஒரு அணியாகவும், ஆரி, ரியோ, கேப்ரியலா ஒரு அணியாகவும் சுச்சி, பாலா, ரம்யா பாண்டியன் ஒரு அணியாகவும், அர்ச்சனா, சோம், சம்யுக்தா ஒரு அணியாகவும் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ஆஜீத் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்து மணிக்கூண்டு டாஸ்க்கை விளையாடி வருகின்றனர். 3 மணி நேரத்தை யார் சரியாக கணக்கிடுகிறார்கள் என்பது தான் இந்த டாஸ்க்கின் அடிப்படையாக உள்ளது.
முதல் நாளில் ரியோ அணியினர் 3 மணி நேரம் 1 நிமிடத்தில் இதை செய்திருந்தனர். நேற்று 3 மணி நேரம் 32 நிமிடத்தில் இதை முடித்தனர். ஆனால் அர்ச்சனா, சோம், சம்யுக்தா அணியினர் 3 மணி நேரம் 8 நிமிடம் மற்றும் 3 மணி நேரம் 4 நிமிடங்களில் இந்த டாஸ்க்கை முடித்துள்ளனர். அடுத்த ரவுண்டிலும் அவர்கள் இதேபோல சரியாக கணித்தால் அவர்கள் அணி வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
ரசிகர்களின் கணிப்பும் இவர்களின் அணி வெற்றிபெறும் என்பதாகவே உள்ளது. ஒருவேளை அர்ச்சனா அணியினர் 3-வது ரவுண்டில் சொதப்பி ரியோ அணியினர் சரியாக கணிக்கும் பட்சத்தில் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரம் பாலாஜி இந்த டாஸ்க்கை சொதப்பி இருப்பதால் பிக்பாஸ் என்ன முடிவெடுப்பார் என்பதையும் கணிக்க முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.