அர்ச்சனா வீட்டில் விசேஷம்... பிரமாண்டமாக நடந்த விழா... குவிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா, சோம், ரியோ மற்றும் கேபி ஒரு குழுவாக செயல்படுகின்றனர் என்று சில போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்பே குற்றச்சாட்டு வைத்தனர். எது எப்படி இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் அர்ச்சனா புலியாக மாறிவிடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

archana sister babay shower function பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் விசேஷம்

அதே போல் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் பலருக்கும் தேவையான சமயங்களில் அன்பு காட்டினார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் அவர் காட்டிய அன்பு ஒருதலைபட்சமாக இருக்கிறது என்றும் சில போட்டியாளர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது இப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இந்நிலையில் அர்ச்சனா வீட்டின் தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அவரது தங்கை தற்போது கர்ப்பமாக உள்ளாராம், அவரது பெயர் அனிதா.  சமீபத்தில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அவருக்கு பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ச்சனாவின் மகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது அவரது தங்கைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் போட்டியாளர்களான நிஷா, ரமேஷ், ரேகா, கேபி, அனிதா மற்றும் அவரது கணவர் போன்ற பலரும் பங்கெடுத்துள்ளனர். அந்த வீடியோ இதோ..!

அர்ச்சனா வீட்டில் விசேஷம்... பிரமாண்டமாக நடந்த விழா... குவிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்! வீடியோ

Tags : Archana

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Archana sister babay shower function பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் விசேஷம்

People looking for online information on Archana will find this news story useful.