VIDEO: ஆமாம்! அது 'உண்மை' தான்... அர்ச்சனாவுக்கு 'குறும்படம்' போட்ட ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற ரோபோட் டாஸ்க்கில் பாலாஜி, அன்பு கேங்கில் இருந்து ரியோ மற்றும் நிஷாவை தன்னுடைய அணிக்காக எடுத்து கொண்டார். அவரின் இந்த ராஜதந்திரம் காரணமாக அன்பு அணி தற்போது அபாய கட்டத்தில் உள்ளது. குறிப்பாக நிஷாவை வைத்து அர்ச்சனாவுக்கு எதிராக, பாலாஜி போட்ட ஸ்கெட்ச் நன்றாக வேலை செய்தது.

நிஷா சொன்னது போல அர்ச்சனா முட்டையை உடைத்து அந்த வாசனையை முகர்ந்தபடி பெரும்பாலான நேரம் இருந்தார். இடையில் அவரை சிரிக்க வைக்க மனிதர்கள் அணி முயன்றது. அப்போது அவர் சிரிப்பை கண்ட்ரோல் செய்தார். இதை நிஷா சொல்லியும் இல்லையென மறுத்து விட்டார். இதேபோல நிஷா, அவரின் அப்பா குறித்து பேசியபோதும் அவர் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.ஆனால் இந்த இரண்டு விஷயங்களையும் அர்ச்சனா மறுத்து விட்டார்.

எனினும் பாலாஜி அவரின் இரண்டு ஹார்ட்டுகளை எடுத்து கொண்டார். பின்னர் அர்ச்சனா இதுகுறித்து விவாதித்த போது பாலாஜி ஹார்ட்டை திரும்ப அளிக்கவில்லை. பிக்பாஸ் அர்ச்சனாவிடம் திரும்ப அளிக்க சொல்லவில்லை என ரியோ கூறினார். கடைசிவரை அர்ச்சனா இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா சிரித்தது உண்மை தான் என அவருக்கு சமூக வலைதளங்களில் குறும்படம் போட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Archana not Accepted the truth in Robot Task, twitter reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.