"நான் தான்பா PRODUCER"... LOVE TODAY பட PUBLIC REVIEW-வில் அர்ச்சனா கல்பாத்தி! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'லவ் டுடே' படத்தின் Public Review வீடியோவில் அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஐக்கிய அமீரக அரசு மூலம் மிகப் பெரிய கௌரவத்தை பெற்ற நடிகர் சீயான் விக்ரம்.. வைரல் போட்டோ

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி' படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர்.  காமெடி டிராமாவாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் AGS நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒரு Public Review வீடியோவில் பேசும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஊடகவியலாளர் ஒருவர்,  "பிரதீப் சார் வந்து ஹீரோவா பண்ணிருக்காரு.. உங்களோட Response?" என அர்ச்சனா கல்பாத்தியிடம் கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அர்ச்சனா கல்பாத்தி, "நான் தான்பா Produce பண்ணேன்.. எனக்கு தெரியும்பா!"என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

Also Read | G.V. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்.. ஜோடியான பிரபல மலையாள நடிகை! ஷூட்டிங் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Archana Kalpathi Love Today Movie Public Review Video Went Viral

People looking for online information on AGS Archana Kalpathi, Archana kalpathi, Love today, Love Today Movie Public Review will find this news story useful.