KGF ராக்கியோட அம்மாவுக்கு வயசு இவ்வளவு தானா? அடடே.. KGF - 3 சாந்தம்மா ஷேரிங்ஸ் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

Archana Jois about KGF Chapter 2 Shanthamma Role
Advertising
>
Advertising

யாஷ்க்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார்.

Archana Jois about KGF Chapter 2 Shanthamma Role

இந்த படத்தில் சாந்தம்மா எனும் கதாபாத்திரத்தில் ஹூரோ ராக்கியின் அம்மாவாக கர்நாடகா பெங்களூருவைச் சார்ந்த நடிகை அர்ச்சனா நடித்து இருந்தார். இவர் 1997 டிசம்பரில் பிறந்த 27 வயதான இளம் நடிகை ஆவார். 

இவர் வணிகரீதியாக வெற்றி பெற்ற, K.G.F: அத்தியாயம் 1 மற்றும் K.G.F: அத்தியாயம் 2 படங்களில் நடித்து இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். கன்னட தொலைக்காட்சி சோப்பு விளம்பரங்களான துர்கா மற்றும் மகாதேவி ஆகியவற்றிலும் நடித்துள்ளார். 

இவர் பிரத்யேகமாக நமது Behindwoods சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பல சுவராஸ்யமான தகவல்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் நவின் மேனனின் கேள்விகளுக்கு பகிர்ந்துள்ளார். அதில், கே. ஜி. எப் மூன்றாம் பாகம் பற்றிய அறிவிப்பு ஆச்சரியம் அளித்ததாகவும் கூறினார். கே.ஜி.எப்-ன் தாலாட்டு பாடலையும் பாடினார் நடிகை அர்ச்சனா. படம் பற்றிய ரசிகர்களின் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் தனது காதாபாத்திரம் தாய்மை நிறைந்ததாகவும், இரண்டாம் பாகத்தில் கோபம் மிகுந்த கதாபாத்திரமாகவும் இருந்ததாக கூறினார். 

பேட்டியின் முழு வீடியோ இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KGF ராக்கியோட அம்மாவுக்கு வயசு இவ்வளவு தானா? அடடே.. KGF - 3 சாந்தம்மா ஷேரிங்ஸ் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Archana Jois about KGF Chapter 2 Shanthamma Role

People looking for online information on Archana Jois, KGF, Kgf 2, KGF Chapter 2, Rocky, Rocky Mother, Shanthamma will find this news story useful.