நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லி, பிகில் படத்தின் முதல் சிங்கப்பெண் குறித்த தகவலை பகிர்ந்துக் கொண்டார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.19) தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லி, தனது வெற்றியின் சீக்ரெட்டாக இருந்தது, கதை சொல்ல செல்லும் போது அணிந்திருந்த க்ரே நிற ஷர்ட். ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றிக்கு அது தான் காரணம் என்று பார்த்தேன். ஆனால் மெர்சலில் தான் தெரிஞ்சது வெற்றிக்கு காரணம் விஜய் அண்ணா என்று என கூறினார்.
இதையடுத்து, பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பற்றி பேசுகையில், ‘அர்ச்சனா எனக்கு அக்கா. நிறைய சண்டை போடுவோம். சண்டை வரும்போதெல்லாம் அப்பா அகோரம் சார்கிட்ட போவோம். அப்பாங்க எப்போதுமே பொண்ணுங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு ஆனா, அகோரம் சார் அட்லி சொன்ன சரியா இருக்கும் என்பார். ‘பிகில்’ படத்தின் முதல் சிங்கப்பெண்ணாக திகழ்ந்தது அர்ச்சனா கல்பாத்தி தான் எனவும் அட்லி கூறினார்.