டெலிகாலர் டாஸ்க்கில் தங்களின் பெர்பாமென்ஸை வைத்து போட்டியாளர்கள் தங்களை நேற்று வரிசைப்படுத்தி கொண்டனர். இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் பல்வேறு அடிதடிகள், சண்டைகள் நடந்தது. சனமை போட்டியாளர்கள் அனைவரும் டார்கெட் செய்தனர். ஆனால் தன்னுடைய வாதத்திறமையால் சனம் அதை எல்லாம் கடந்து இரண்டாவது இடத்தை கைப்பற்றி விட்டார்.
இந்த அடிதடிகளை ஓரமாக அமர்ந்து அர்ச்சனா, நிஷா இருவரும் கவனித்து கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சனா, '' சனமுக்கு கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை. பாலா எப்போ பார்த்தாலும் சண்டை தான்,'' என்று நிஷாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். இதையடுத்து இரவு பாலாவின் பிறந்தநாள் என்பதால் திருநீறு எடுத்து வந்து அவருக்கு நெற்றியில் பூசிவிட்டு அவரை கட்டியணைத்து வாழ்த்து சொன்னார்.
ஆனால் பாலா அர்ச்சனா வைத்த திருநீறை உடனடியாக அழித்து விட்டார். டாஸ்க்கின் போது பாலாவை குறை சொன்ன அர்ச்சனா அவரிடம், ஏன் பாலா இப்படி பண்ண? நீ நல்லா வெளையாட வேண்டிய ஆள் என அவருக்கு அட்வைஸ் கொடுத்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கே விபூதி அடிக்க பாக்குறீங்க போல? என கிண்டலடித்து வருகின்றனர்.