மெகா 'சீரியலா' மாறிடுச்சு... இந்த 'ரெண்டு' பேருக்கு தான் கொடுத்து இருக்கணும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயந்திர மனிதா டாஸ்க் முடிவுக்கு வந்ததை அடுத்து வழக்கம்போல பெஸ்ட் மற்றும் ஒர்ஸ்ட் பெர்பாமர்கள் இருவரை தேர்வு செய்ய சொல்லி, பிக்பாஸ் அன்பு கட்டளையிட்டார். (இது அந்த அன்பு இல்ல) சொல்லி வைத்தது போல பெரும்பாலான நபர்கள் அனிதாவை தேர்வு செய்தனர். இதேபோல ஜித்தனும் இந்த லிஸ்டில் இணைந்தார்.

இதைப்பார்த்த அனிதா தன்னுடைய மனதில் பட்டதை பேச அதற்கு நிஷா, ரியோ இருவரும் பதிலளித்தனர். எனினும் வாக்கு எண்ணிக்கை முடிவில் அனிதா ஜெயிலுக்கு சென்றார். வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து, டாஸ்க்கையும் தான் கையாண்டது குறித்து அனிதா, ரம்யாவிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது இந்தியளவில் அனிதா ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் நியாயமா பார்த்தா ரோபோ டாஸ்க்கை மெகா சீரியலா மாத்துன அர்ச்சனா, நிஷாவுக்கு தான் ஒர்ஸ்ட் பெர்பாமர் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பனும் என ரசிகர்கள் கோபமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Archana and Nisha deserving for the Worst Performers

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.