சந்தனக்கூடு விழாவுக்கு ஆட்டோவில் வந்த A.R. ரஹ்மான்.. நாகூர் தர்ஹாவில் வழிபாடு.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான்.

Advertising
>
Advertising

Also Read | ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேயின் தந்தை மரணம்.. இரங்கல் தெரிவித்த நிதியமைச்சர்..

தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.

சமீபத்தில் வெளியான படங்களான  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய  படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.

இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்ஹாவின் சந்தனக் கூடு விழாவில் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்துள்ளார். ஆட்டோவில் வந்திறங்கிய ரஹ்மானை தர்ஹா நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

சந்தனக்கூடு  நிகழ்வை அடுத்து பிரியா ஆண்டவர் சமாதிக்குச் சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | அடேங்கப்பா!!! ரூ.3,000 கோடி முதலீட்டில் KGF பட தயாரிப்பு நிறுவனத்தின் மெகா ப்ளான்..

சந்தனக்கூடு விழாவுக்கு ஆட்டோவில் வந்த A.R. ரஹ்மான்.. நாகூர் தர்ஹாவில் வழிபாடு.. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Visit Nagoor Dargah Kanthuri festival

People looking for online information on AR Rahman, AR Rahman Visit Nagoor Dargah, Nagoor Dargah Kanthuri festival will find this news story useful.