ரோஜா, இருவர் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் இசையமைப்பாளராக பிரபலமானவர் ஏ.ஆர். ரஹ்மான்.

Also Read | Angamaly Diaries நடிகர் மர்மமான முறையில் மரணம்?.. வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 'உடல்'.. அதிர்ச்சி பின்னணி
கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து தமது இசையால், பலரையும் கட்டிப் போட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட, ரஹ்மான் இசையில் வெளியாகி இருந்த கோப்ரா, இரவின் நிழல், மலையன்குஞ்சு உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள், ரசிகர்கள் பலரின் பேவரைட் பிளேலிஸ்ட்டிலும் இடம் பெற்று, அவர்களைக் கட்டிப் போட்டும் வருகிறது.
அந்த வகையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கி உள்ள "பொன்னியின் செல்வன்" படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று, திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் டீசரும் மக்கள் மத்தியில் கடும் ஆவலை ஏற்படுத்தி உள்ளதால், படத்தின் ரீலீஸையும் அவர்கள் எதிர்நோக்கி காத்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் திரைபடத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மேலும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் முதல் சிங்கிள், இன்று (31.07.2022) மாலை, 6 மணிக்கு வெளியாக உள்ளது. 'பொன்னி நதி' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஏ.ஆர். ரஹ்மானே பாடி உள்ளார். மேலும், இந்த பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ளார். ரஹ்மான் குரலில், பொன்னி நதி பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சைவ உணவின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்த ரஹ்மான், "அடுத்த பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "கமல் சார் கூட அவ்ளோ நேரம் ஒர்க் பண்ணது.." Impress ஆன விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ!!