'தில் பேச்சரா' படம் 24 மணி நேரத்தில் 2000 கோடி வசூலா ? - ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படமான 'தில் பேச்சரா' (Dil Bechara) கடந்த ஜூலை 24 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து ஹிந்தூஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தியை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்திருந்தார். அந்த செய்தியின் படி 'தில் பேச்சரா' படம் 24 மணி நேரத்தில் 95 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளதாம்.

இது உலக அளவில் மிகப்பெரிய ரெக்கார்டு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை 95 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ள நிலையில் ஒருவேளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால், இந்தியாவில் சராசரியாக ஒரு டிக்கெட் ரூ.100 என்று கணக்கிட்டால் மொத்தம் ரூ.950 கோடி வசூலாகியிருக்கும்.

மேலும் பிவிஆர் டிக்கெட் விலையை கடந்த 2019-ல் ரூ.207 என்று உயர்த்தியதின் அடிப்படையில் கணக்கிட்டால் ரூ.2000 கோடி வசூலாகியிருக்கும் என்று தெரியவருகிறது. இந்த செய்தி ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman shares a news about Sushant Singh Rajput's Dil Bechara goes Viral | சுஷாந்த் சிங்கின் தில் பேச்சரா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த

People looking for online information on Dil Bechara, Sushant Singh Rajput will find this news story useful.