சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா.. A.R.ரஹ்மான் வெளியிட்ட செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் புதிய அப்டேட்டை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளியான PS1 பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்! புது வெள்ளம்!

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் 2 பாடல்களில் தராங்கினி எனும் ஒரு பாடலும்  "ஏலே இளஞ்சிங்கமே" எனும் மற்றொரு பாடலும் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோப்ரா படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹ்மான் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | மஞ்சள் சட்டை வெள்ளை வேட்டியில் கார்த்தி.. விருமன் Audio Launch Special போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Shared Vikram Cobra Movie Background Music Work

People looking for online information on AR Rahman, Cobra movie, Vikram, Vikram cobra movie, Vikram Cobra Movie Background Music will find this news story useful.