பொன்னியின் செல்வன் படத்தின் மிரட்டலான MAKING! A.R. ரகுமான் வெளியிட்ட மணிரத்னம் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்நிலையில் A R ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் இசைக்கோர்வைக்காக படத்தின் காட்சிகளை டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைகலைஞர்களுக்கு விளக்குகிறார்.  இது குறித்து ரகுமான் இன்ஸ்டாகிராமில் "PS PS PS briefing from the master #manirathnam #ponniyinselvan " குறிப்பிட்டுள்ளார்.

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman shared a video of ponniyin selvan movie

People looking for online information on A.R. Rahman, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, பொன்னியின் செல்வன், மணிரத்னம், ரகுமான், விக்ரம், Karthi, Manirathnam, Ponniyin Selvan, Trisha, Vikram will find this news story useful.