இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான்.
Images are subject to © copyright to their respective owners.
தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.
சமீபத்தில் வெளியான படங்களான மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.
இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது டிவிட்டர் பக்கத்தில் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி புனே நகரில் உள்ள தி மில்ஸ், ராஜா பகதூர் இண்டர்நேஷ்னல் லிமிடெட் புனேயில் கச்சேரி நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த ட்வ்டுக்கு கீழ் ஒரு ரசிகை, "சார் சென்னை என்ற பெயரில் ஒரு ஊர் உள்ளது, உங்களுக்கு நினைவிருக்கிறதா?". என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ரஹ்மான், "பர்மிஷன் பர்மிஷன், பர்மிஷன், 6 மாத செயல்முறை" என பதில் அளித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையில் கச்சேரி நடத்த அனுமதி பெறுவது என்பது ஆறுமாத செயல்முறை என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.