ரஜினி பிறந்தநாளில் A.R. ரஹ்மான் வெளியிட்ட UNSEEN வீடியோ.. மனுசன் ஆச்சர்யத்தில் மூழ்கிட்டாரு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ. ஆர். ரஹ்மான் இதுவரை காணாத வீடியோவை வெளியிட்டு வாழத்தியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டர்கள்.. ரயில் முழுக்க தளபதி தான்.. மாஸ் வீடியோ!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம் மூலம் திரைப்பட எழுத்தாளராக அறிமுகமாகி இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும், 99 சாங்ஸ் படத்திற்கு, இசையமைத்து தயாரிக்கவும் செய்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

இதனைத் தொடர்ந்து, இசை, கதை என்பதைத் தாண்டி, இயக்குனர் அவதாரத்தையும் எடுத்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். 'லி மஸ்க்' (Le Musk) என்னும் 36 நிமிடம் ஓடக் கூடிய திரைப்படம் ஒன்றை ரஹ்மான் இயக்கி உள்ளார்.

விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், லி மஸ்க் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், நோரா அரனிசாண்டர், கை பர்னெட் ஆகியோர்  முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருந்தது.

இந்த படத்தினை சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு திரையிடல் மூலம் கண்டு களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்வின் வீடியோவை ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பகிர்ந்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

படத்தை பார்த்த பின் ரஜினிகாந்த், " மை காட், என்ன ரஹ்மான் சார் இப்படி பண்ணிருக்கீங்க.. Mind Blowing.. Superb..  தலைசிறந்த படைப்பு!" என கூறி ரஹ்மானை வாழ்த்தும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

 

Also Read |  வைரலாகும் ஜிகர்தண்டா DOUBLE X போஸ்டர்கள்.. டிசைனர் இவரா? கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Release UNSEEN Video of Super Star Rajinikanth

People looking for online information on AR Rahman, LeMusk, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.