PS1, இரவின் நிழல், VTK படங்களின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்.. AR ரஹ்மான் கொடுத்த செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான்.

Advertising
>
Advertising

Also Read | ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்'.. வெளியான மிரட்டலான MAKING GLIMPSE வீடியோ! தலைவர் லுக் 🔥

தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.

தற்போது  மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய முக்கிய படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.

இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, 99 சாங்ஸ், இரவின் நிழல் ஆகிய படங்களில் உள்ள ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்குகளை வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாக ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது இந்த அறிவிப்பு தான் ரஹ்மான் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234 ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

 

Also Read | நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியான CONNECT படத்தின் ஹாரர் டீஸர்.. சும்மா மிரட்டுதே!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Ponniyin Selvan Venthu Thaninthathu Kaadu OST Release Date

People looking for online information on AR Rahman, Iravin nizhal, Ponniyin Selvan, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.