எப்படி பார்த்தாலும் செம கூட்டணி!.. உதயநிதி - மாரி படத்திற்கு மியூசிக் யாருனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : மாரி செல்வராஜ் இயக்கும் புது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Advertising
>
Advertising

உதயநிதி ஸ்டாலின்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் புது படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக நடிக்கிறார் ஃபகத் பாசில். இந்நிலையில்,  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் புது படத்தில் உதயநிதி ஸ்டாலினே நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று, பல விருதுகளையும் குவித்தது.

அடிபொலி!!! அடுத்தது இப்படி ஒரு படமா? கதிருடன் கைகோர்க்கும் 'பேச்சுலர்' ஹீரோயின்!

பல ஹிட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த "கர்ணன்" படமும் சூப்பர் ஹிட் படமானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினுடன் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆதவன், ஏழாம் அறிவு, நீர்பறவை, மனிதன் போன்ற படங்களும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும். அந்த படங்கள் அனைத்தும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இணையும் இசைப்புயல்

மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் கூட்டணி உறுதி என வெளிவந்த நிலையில், வில்லனாக  ஃபகத் பாசில் நடிக்க உள்ளார்.  தற்போது இவர் வில்லனாக நடித்து வெளிவந்து இருக்கும் படம் "புஷ்பா தி ரைஸ்" மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. வசூல்ரீதியாகவும் ஹிட் கொடுத்துக்கொண்டு இருக்கும் படமாக இருக்கிறது. அடுத்து, கமல்ஹாசன் படமான "விக்ரம்" படத்திலும் வில்லனாக மிரட்டுகிறார் ஃபகத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கும் புது படத்திற்கு, இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அயலான் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போடு!! கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, ரகுமான், சரத்குமார்.. தெறிக்கவிடும் டைட்டில் லுக்!

 

 

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman joins with Mari selvaraj in his new movie

People looking for online information on AR Rahman, உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், மாரி செல்வராஜ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், Mari Selvaraj, New movie, Udhayanidhi Stalin will find this news story useful.