BREAKING : சிம்புவுடன் மீண்டும் கை கோர்க்கும் ஏ.ஆர்.ரகுமான்.!! VTV மேஜிக் விரைவில்.. செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. 

சிம்பு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் | ar rahman joins for silambarasan upcoming film

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வருவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சிம்பு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் | ar rahman joins for silambarasan upcoming film

இதை தொடர்ந்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சிம்பு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் | ar rahman joins for silambarasan upcoming film

மேலும் சிம்பு - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் டைட்டில் அண்மையில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு பத்து தல என பெயரிடப்பட்டுள்ளது. சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் பத்து தல திரைப்படம் குறித்து ஒரு மாஸ் தகவல் கிடைத்துள்ளது. 

இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வின்னைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களில் சிம்பு - ரகுமான் கூட்டணி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இவர்கள் இணைவது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் | ar rahman joins for silambarasan upcoming film

People looking for online information on AR Rahman, Pathu Thala, Simbu will find this news story useful.