BAMBA BAKYA: "இந்த பேரும் காஸ்டியூமும் ரஹ்மான் சார் கொடுத்தது..!" - பாடகர் பம்பா பாக்யா நினைவலைகள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்யா தற்போது உயிரிழந்துள்ள சம்பவம், தமிழ் திரையுலகினர் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 49.

Advertising
>
Advertising

Also Read | Breaking: பெரும் சோகம்.! ‘சிம்டாங்காரன்’ பாடகர் பம்பா பாக்யா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விக்ரம் - பிரிதிவ்ராஜ் நடிப்பில் மணிரத்னம் இயக்க ராவணன் திரைப்படத்தில் இருந்தே பாடிவந்தவர் பாடகர் பம்பா பாக்யா. இவர் பின்னர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை விவேக் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எந்திரன் 2.0 படத்தில் வரும் புள்ளினங்காள் பாடல், சர்வம் தாள மயம் படத்தில் வரும் பாடல்கள் என பல பாடல்களை பாடிய இவர்,  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காலமே காலமே' என்கிற உருக்கமான பாடலை பாடியிருப்பார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வரலாற்று புனைவு திரைப்படமான, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகின.

அதில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய பொன்னி நதி பாடலில் வரும் தொடக்க வரிகளை பம்பா பாக்யா தான் முதலில் பாடியிருப்பார். அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரிஹானா மற்றும் அவரை தொடர்ந்து முதன்மை பாடகராக அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இருப்பார். இது தவிர இன்னொரு பாடலையும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடியிருக்கிறார் பம்பா பாக்யா.

சென்னையில் குடும்பத்துடன் வசித்துவந்த இவர், நேற்றிரவு உடல்நலக்குறைவால் 12.30 மணிஅளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய இந்த திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மிகவும் எளிமையான பேச்சும், தன்மையும் கொண்ட பம்பா பாக்யா, சில மாதம் முன்பு நம்மிடம் பேசிய த்ரோபேக் நேர்காணலில் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அதில், “என்னுடைய நிஜ பெயர் பாக்யராஜ்தான். ரஹ்மான் சார் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். உடல் மற்றும் மன ஒழுக்கத்தை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். ரஹ்மான் சார் அவ்வப்போது கலகலப்பாகவும் எங்களிடம் நடந்துகொள்வார்.

அப்படி ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் சார் சொல்லிவிட்டு, ஒரு பத்திரிகையில் இருந்து என்னை பேட்டி எடுக்க வந்தார்கள். நான்தான் ‘பம்பா பாக்யா’ என்றும் அவர்களிடம் ரஹ்மான் சார் சொல்லவும் இல்லை. மாறாக, ‘பம்பா பாக்யா சாரை இண்டர்வியூ பண்ணனும்னு அங்க இருக்குறவர் கிட்ட கேளுங்க - அவர் விபரம் சொல்லுவார்’ என ரஹ்மான் சார் அவரிடம் சொல்லிவிட்டார் போல.

அந்த பத்திரிகையாளரும், பம்பா பாக்யா என்றதும் யாரோ இந்தி பாடகராக இருப்பார் போல என நினைத்துக்கொண்டுவிட்டார் (சிரிக்கிறார்). ஆம், என்னை பேட்டி எடுக்க வந்த அவர் என்னிடமே, ‘பம்பா பாக்யா சாரிடம்’ பேட்டி எடுக்க வந்திருக்கேன்னு சொல்லுங்க.. நான் வெயிட் பண்றேன்’ என்றார். அதன் பிறகு ஒன்றும் புரியாமல் ரஹ்மான் சாரிடம் கேட்டபோதுதான் விஷயமே தெரிந்தது. இறுதியில் நானும் அந்த பத்திரிகையாளரும் வெடித்து சிரித்துவிட்டோம்.

பாக்யராஜ் என்கிற எனது பெயரை பம்பா பாக்யா என்று மாற்ற ஆலோசனை தந்து, இந்திய அளவிலும் தெரியும்படி அடையாளம் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான். இந்த பெயர் மட்டுமல்ல, எப்போதும் நான் தோன்றும் இந்த காஸ்டியூமும் கூட ரஹ்மான் சார் சொன்னபடி அமைத்துக்கொண்டதுதான். எப்போதும் அவருடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாய் இருப்பேன். God is Great.!” என்று கூறியிருந்தார்.

இன்று மரணம் அடைந்துள்ள பாடகர் பம்பா பாக்யா (எ) பாக்யராஜின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

Also Read | RIP Bamba Bakya: "மாபெரும் இழப்பு" - பாடகர் பம்பா பாக்யா மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல்.!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman gave this name Singer Bamba Bakya Throwback

People looking for online information on Bamba Bakya, Maniratnam, Ponni Nadhi Song, Ponniyin Selvan 1, Ponniyin Selvan part 1, PS-1, RIP Bamba Bakya will find this news story useful.