கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | கடும் குளிரில் 20 அடி ஆழ நீருக்கு அடியில் ஆர்யா.. ‘கேப்டன்’ படத்துக்காக எடுத்த முயற்சி.!
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், சமீபத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா குறித்து பேசிய விஷயம், பலரையும் மனமுருக வைத்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ராவணன் திரைப்படத்தில் இருந்தே பாடிவந்த பாடகர் பம்பா பாக்யா, சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார். இதன் பின்னர், ரஹ்மான் இசையில் எந்திரன் 2.0 படத்தில் வரும் புள்ளினங்காள் பாடல், சர்வம் தாள மயம் படத்தில் வரும் பாடல்கள் என பல பாடல்களை பாடினார். குறிப்பாக 'பிகில்' படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் 'காலமே காலமே' பாடலை மிகவும் உருக்கமாக பாடியிருப்பார்.
மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் வெளியான பொன்னி நதி பாடலின் தொடக்க வரிகளை பம்பா பாக்யா பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பாடலை பம்பா பாக்யா குறித்தும், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி பாராட்டியும் பேசிய ரஹ்மான், “அண்மையில் நம்மை விட்டு பம்பா பாக்யாவை மிஸ் பண்ணுகிறேன். பம்பா பாக்யாவுக்காக 8 முதல் 10 பாடல்கள் கொண்ட மியூசிக் ஆல்பம் ஒன்றை உருவாக்க திட்டம் வைத்திருந்தேன். ஆனால், அதை உருவாக்க முழுமையாக பாடி முடிக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
பம்பா பாக்யாவுக்காக பிரத்யேக ஆல்பம் ஒன்றை உருவாக்க ஏ.ஆர். ரஹ்மான் திட்டமிட்டிருந்தும் அது முடியாமல் போனதும், பாடகர் பம்பா பாக்யா ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னதாக மறைந்த பம்பா பாக்யாவின் மறைவுநாளன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாக்யாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Also Read | PS1: உதவி இயக்குநரா இருந்தப்போ.. த்ரிஷாவுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்த நடிகர் கார்த்தி.!