A.R.Rahman: இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழில் ரோஜா, இருவர் போன்ற படங்கள் தொடங்கி, பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திரங்கள், கலைஞர்களுடன் இணைந்து முன்னணி திரைப்படங்களில் இசையமைத்து புகழ்பெற்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவற்றுக்காக ஆஸ்கார் விருதுகள் வரை பல விருதுகளையும் பெற்றவர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பயணம்
முன்னதாக 99 சாங்ஸ் என்கிற மியூசிக்கல் திரைப்படத்துக்கு கதை எழுதி, தயாரித்து இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தமிழில், தொடர்ச்சியாக தளபதி விஜய் நடித்த திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, அத்ரங்கி ரே திரைப்படம் வெளியானது. தமிழில் கல்யாண கலாட்டா என்கிற பெயரில் வெளியாகுயுள்ள இப்படத்தில் தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். இந்த படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியானது.
தமிழில்..
அடுத்ததாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகும் இரவின் நிழல் படத்துக்கும், சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது’ காடு திரைப்படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள்
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள், கதிஜா ரஹ்மான், தமது இன்ஸ்டாகிராமில், “எல்லாம் வல்ல இறை அருளுடன், Riyasdeen Shaik Mohamed அவர்களுடன் நடந்த எனது நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று அறிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், Riyasdeen Shaik Mohamed ஒரு ஆடியோ என்ஜினியர் என்றும், இந்த திருமண நிச்சயதார்த்தம் கதிஜா ரஹ்மானின் பிறந்த நாளான, டிசம்பர் 29-ஆம் தேதி குடும்பத்தினர், நெருங்கி உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மத்தியில் நடந்ததாகவும் கதிஜா ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.