ஏ.ஆர். ரஹ்மானை நேரில் கண்டு, நெகிழ்ச்சி அடையும் ரசிகை ஒருவரின் வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். அவர் அறிமுகமாகி, சுமார் 30 ஆண்டுகள் ஆகியும், இன்றும் தன்னுடைய பாடல்களால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வருகிறார்.
இத்தனை ஆண்டு கால இசைப் பயணத்தில், ஃபிலிம்பேர் விருது, தேசிய விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளையும், கோல்டன் குளோப், கிராமி விருது, ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.
தலைமுறை தாண்டித் தொடரும் இசை
நாட்கள் செல்ல செல்ல, காலத்திற்கேற்ற வகையில், தன்னை அப்டேட் செய்து கொள்வதில் ரஹ்மானுக்கு நிகர் யாருமில்லை. அதனால் தான், மூன்று தலைமுறையாகியும் இன்றைய காலத்து இளைஞர்களும் ரசிக்கும் வகையில், இசையமைத்து வருகிறார்.
பொன்னியின் செல்வன்
தற்போதும் கோப்ரா, பொன்னியின் செல்வன், பத்து தல, அயலான், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்கள், ரஹ்மான் இசைக்கு வேண்டி வரிசை கட்டி நிற்கிறது. இவற்றுள் குறிப்பாக, பொன்னியின் செல்வன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். மணிரத்னம் இயக்கம் இந்த திரைப்படம், 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை: பிரியங்கா சோப்ரா தம்பதினரை கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்
அதிக ஆர்வம்
மணிரத்னம் கனவு படம் கூட என்பதால், நிச்சயம் ஏ.ஆர். ரஹ்மான் பல்வேறு புது புது இசை வாத்தியங்கள் மற்றும் புதுமையான பாடல்களை உருவாக்கியிருப்பார் என்பதை அறிந்து கொள்ள, ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பு, கதை எழுதுவது என இவற்றிலும் பிசியாக ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.
இந்த டான்ஸ் ஸ்டெப் எப்படி இருக்கு? புஷ்பா படத்தின் சமந்தா பாடல்! வெளியான புதிய BTS வீடியோ...
பிரம்மித்த ரசிகை
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. ரஹ்மானின் தீவிர ரசிகை ஒருவர், ஏ.ஆர். ரஹ்மானை பொது இடத்தில் சந்தித்துள்ளார். அப்போது, பிரம்மித்து போன அந்த ரசிகை, ரஹ்மானின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் எனக் கேட்கவே, அவரும் ஓகே சொல்லியுள்ளார்.
அதிகம் வைரல்
தொடர்ந்து, காலில் விழுந்து ஆசி பெற்ற அந்த ரசிகை, ரஹ்மானுடன் ஃபோட்டோவும் எடுத்துக் கொள்கிறார். இந்த வீடியோ, எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இருந்த போதும், இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.