இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழின் முன்னணி இயக்குநராக மதிக்கப்படுபவர். சிறந்த சமூக விழிப்புணர்வு படங்களை கொடுத்ததற்காக பல வேளைகளில் அங்கீகரிக்கப்பட்டவர்.
அஜித்தை வைத்து தீனா, விஜயகாந்த் நடிப்பில் ரமணா, சூர்யா நடிப்பில் கஜினி, 7-ஆம் அறிவு, விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்கார் என பல வெற்றிப்படங்களை தந்த ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்தும் ஸ்பைடர் எனும் படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான கேரக்டர் புகழப்பெற்றது. இதே போல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய திரைப்படம் தர்பார். இத்தகைய படங்களை தந்த ஏ.ஆர்.முருகதாஸ் சில சமயம் தன் படங்களில் கேமியோ ரோலில் ஆங்காங்கே வந்ததும் உண்டு. ஆனால் இயக்குநராவதற்கு முன்பாக உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டத்திலேயே ஒரு படத்தில் முருகதாஸ் நடித்த படக்காட்சியை "ஸ்டோர் ரூம் மெமரீஸ்" என குறிப்பிட்டு அவரே தமது இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டுள்ளார்.
1997ல் அப்பாஸ், சிம்ரன் நடிப்பில் உதயசங்கர் இயக்கத்தில் வெளியான பூச்சூடவா எனும் படத்தில் நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ் நடித்த ஒரு காட்சியில் காபி கொடுக்கும் பையனாக முருகதாஸ் வருகிறார். அவரை கண்ணா, கண்ணா என ஹீரோ பெயரை மறைமுகமாக சொல்லி அழைத்து சிம்ரனை தவிக்கவிடுகிறார் நாகேஷ்.
இறுதியில் உன் பெயர் என்னப்பா? என கேட்டதும், “முருகதாஸ்!” என சொல்கிறார் நம் இயக்குநர் முருகதாஸ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ALSO READ: “Miss You பாலு uncle!”.. எஸ்பிபி பிறந்த நாளில் டி.இமான், வெங்கட் பிரபு உருக்கமான ட்வீட்!