கைக்குழந்தையாக அமீன்😍.. "எனக்கு ஆசிரியராகவும்".. பிறந்தநாளில் பகிர்ந்த THROWBACK போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ. ஆர். ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

AR Ameen Birthday wish to AR Rahman with Old Throwback Photo
Advertising
>
Advertising

Also Read | "உடைய மாத்துறதா இருந்தா இப்போ மாத்திக்கங்க".. பிக்பாஸ் சொன்னதும் ஒரு செகண்ட் ஷாக் ஆன ஷிவின்!

தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.

AR Ameen Birthday wish to AR Rahman with Old Throwback Photo

சமீபத்தில் வெளியான படங்களான  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய  படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.

இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு ரஹ்மானை அவரது ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஹ்மானின் மகனும் பாடகருமான அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தை ரஹ்மான் குறித்து ஒரு பதிவை பதிவிட்டு இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கைக்குழந்தையாக இருக்கும் அமீனை ரஹ்மான் தூக்கி வைத்து இருப்பது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது. மேலும், என்னுடைய எல்லாமுமாக இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் என் தந்தையாகவும் ஆசிரியராகவும் இருப்பதில் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே" என அமீன் பதிவிட்டுள்ளார்.

அமீனும் இன்று தனது 21 வது பிறந்தநாளை பிறந்தநாளை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Also Read | உதயநிதியுடன் A.R. ரஹ்மான்.. ARR பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த செம்ம போட்டோ..

தொடர்புடைய இணைப்புகள்

AR Ameen Birthday wish to AR Rahman with Old Throwback Photo

People looking for online information on AR Ameen, AR Rahman, AR Rahman birthday will find this news story useful.