சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
Also Read | இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!
இவர் மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் (2016), சண்டே ஹாலிடே (2017) ஆகிய படங்களில் நடித்ததற்காக பிரபலமாக அறியப்பட்டவர்.
8 தோட்டாக்கள் (2017) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாள மயம் (2019) என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் அவரது அடுத்தடுத்த படங்கள் திருசிவபேரூர் கிளிப்தம் (2017), மிஸ்டர் & மிஸ் ரவுடி (2019) மற்றும் ஜீம் பூம் பா (2019) இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
சூர்யா நடித்த சூரரைப் போற்று (2020) படத்தில் பொம்மியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக 2022 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற உள்ளார்.
டெல்லியில் நடந்த 68வது திரைப்பட விருதுகள் அறிவிக்கும் நிகழ்வில் இதனை மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
Also Read | ஜெயிச்சிட்ட மாறா! சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற சூர்யா.. ! ரசிகர்கள் வாழ்த்து!