அபர்ணாவின் அடுத்த படம் தெரியுமா?.. விஜய் சேதுபதி வெளியிட்ட 'பட்டுரோசா' சிங்கிள் டிராக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப் போற்று படத்தில் நடித்து இந்தியத் திரையுலகில் தனி முத்திரையை பதித்த அபர்ணா பாலமுரளி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்துக்கு முழு வடிவம் கொடுத்து நடித்த அபர்ணா பாலமுரளி அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்ததாகவே பலரும் கூறினர். அத்தகைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய அபர்ணாவின் அடுத்த படம் என்ன என்று சில ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் சார்லஸ் இம்மானுவேல் தயாரிப்பில் ராசு.ரஞ்சித் இயக்கத்தில் தீதும் நன்றும் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பட்டு ரோசா என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் சேதுபதி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ALSO READ: "மாஸ்டர் மாதிரி ஒரு படம் வரணும்!".. இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் பாலிவுட் இயக்குநரின் பரபரப்பு பேட்டி!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aparna Balamurali PattuRosa TheethumNandrum தீதும் நன்றும்

People looking for online information on Aparna Balamurali, Theethum Nanrum, Vijay Sethupathi will find this news story useful.