‘சூரரைப்போற்று’ பொம்மிக்கு என்ன ஆச்சு?.. “FRIENDS & FAMILY பயப்படாதீங்க!”.. RUMOURS-க்கு முற்றுப்புள்ளி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களுள் ஒருவர் அபர்ணா பாலமுரளி.‌

Aparna Balamurali clarification over her health rumours
Advertising
>
Advertising

முன்னதாக நடிகர் வெற்றி நடித்த 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. இதில் தம்முடைய கவனிக்க வைக்கும் நடிப்பை அபர்ணா பாலமுரளி வெளிப்படுத்தி இருந்தார். 

இதனைத் தொடர்ந்து அதன் பிறகு சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது.

Aparna Balamurali clarification over her health rumours

சூரரைப்போற்று, ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட வரலாற்றுப் புனைவு திரைப்படம். இந்த திரைப்படத்தில் மலிவு விலையில் ஆகாய விமான போக்குவரத்து சேவையை உருவாக்க விரும்பும் நாயகனாக சூர்யா நடித்து இருப்பார். இப்படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி, சூர்யாவின் மனைவியாக நடித்திருப்பார்.

கமர்சியல் திரைப்படங்களில் வருவது போன்று, கதாநாயகியாக மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் பொம்மி எனும் கேரக்டர் மூலம் அழுத்தமான நடிப்பை, நடிகை அபர்ணா பாலமுரளி வெளிப்படுத்தி இருப்பார்.  கணவனின் லட்சியத்துக்கு உறுதுணையாக இருக்கும் மனைவியின் கதாபாத்திரமாகவும், சொந்த தொழில் புரியும் பெண்களுக்கு உத்வேகமான பொம்மி கதாபாத்திரமாகவும், துருதுருவென இருக்கும் கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரமாகவும் அசத்தியிருப்பார்.

இந்த நிலையில்தான் அபர்ணா பாலமுரளி குறித்து பரவும் வதந்திக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்து ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். நடிகை அபர்ணா பாலமுரளி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் பல வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இந்த வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அபர்ணா பாலமுரளி, தான் மிகவும் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக தம்முடைய friends & family இந்த வதந்திகளை கண்டு பயம் கொள்ள வேண்டா என கூறியுள்ள அபர்ணா பாலமுரளி, இத்துடன் அண்மையில், தான் சென்று வந்த ஏதோ ஒரு ட்ரிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Aparna Balamurali clarification over her health rumours

People looking for online information on Aparna Balamurali, Aparna Balamurali health, Soorarai Pottru will find this news story useful.