லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் விராத் & அனுஷ்கா.. சமையல் கலைஞருக்கு கொடுத்த செம சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் தங்கள் மகள் வாமிகாவுடன்  இன்பச்சுற்றுலா சென்ற புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற நடிகை வேதிகா.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Vacation Photos

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி & பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு வாமிகா என்ற மகள் இருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் ஏற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை வழி நடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வெல்லாததால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதே காலகட்டத்தில் அடுத்தடுத்து இந்திய அணியின் டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

நவம்பர் 2019 முதல் ஒரு சர்வதேச சதத்தை கூட விராத் கோலி அடிக்கவில்லை. 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 16 போட்டிகளில் 22.73 சராசரி மற்றும் 115.98 ஸ்டிரைக் ரேட்டில் 341 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில் புத்துணர்வுக்காகவும், தொடர்ந்து தேக்கநிலையில் இருக்கும் கிரிக்கெட் பார்மை மீட்டெடுக்கவும் குடும்பத்துடன் விராத் கோலி சுற்றுலா சென்றுள்ளார். தற்போது நடிகை அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனில் உள்ளனர்.

இலண்டனில் அமைந்துள்ள பிரபல Bombay Bustle உணவகத்திற்கு சென்று உணவருந்திய பின்னர் அந்த உணவக்த்தின் தலைமை சமையல்காரர் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

ட்விட்டரில் தம்பதியினருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள அந்த சமையல் கலைஞர் சுரேந்தர் மோகன்,  “இந்தியாவின் அற்புதமான  பெருமைமிக்க நபர்களான விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை எங்கள் @BombayBustle உணவகத்தில் உணவருந்தியதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்று எழுதியுள்ளார்.

அனுஷ்காவும் விராட்டும் லண்டனுக்கு வரும் முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இருந்தனர்.

Also Read | திருச்சியில் நடிகர் அஜித்தை சந்தித்த ரசிகர்.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Anushka Sharma Virat Kohli with Bombay Bustle Chef Surender Mohan

People looking for online information on Anushka sharma, Chef Surender Mohan, Virat Kohli will find this news story useful.